தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இருந்த தமிழ்கட்சிகள் பிளவு பட்டு இருக்கின்றன. அதே போல் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நீதிமன்ற வழக்கு காணப்படுகிறது.
இவ்வாறு தமிழ் கட்சிகள் பிளவுபடாது ஒன்றிணையும் போதே பலமாக முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்ததாகவும் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிசார் பொது மக்களை கைது செய்யும் விடயங்கள், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.



