வவுனியா இலுப்பையடியில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முள்ளிவாய்கால் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வவுனியா இலுப்பையடியில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த கஞ்சி இலுப்பையடியில் உள்ள ஆறுமுகநாவலர் சிலையடிக்கு முன்பாக இன்று (16.05) வழங்கி வைக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர்.
அதனை நினைவு கூர்ந்து அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்காக விளக்கேற்றி ஒரு நிமிட அஞ்சலி செலுத்திய பின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.



