மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி!

#SriLanka #Mannar
Mayoorikka
1 year ago
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்றைய தினம் வியாழக்கிழமை (16) மன்னாரை வந்தடைந்தது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது. 

 இதன் போது வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. 

 இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று வியாழக்கிழமை(16) குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது மன்னார் மாவட்ட பேரூந்து நிலையத்திற்கு முன் அஞ்சலி இடம் பெற்றது. தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இடம் பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி நிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2024/05/1715854669.jpg

 மன்னாரை தொடர்ந்து குறுத்த வாகன பவனி இன்று மாலை வவுனியாவில் வவுனியாவை சென்றடைந்து அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/05/1715854683.jpg

images/content-image/2024/05/1715854697.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!