கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Kilinochchi
Mayoorikka
1 year ago
கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

 யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளது.

 ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தற்போதைக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்து வருகின்றனர் என தெரியவருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!