இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமருக்கும் இடையில் வெடித்த மோதல்!
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கடுமையான வாய்மொழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா யுத்தம் மற்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸாவின் ஆட்சி தொடர்பில் இஸ்ரேல் பிரதமருக்கும் போர் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருவதை இது வெளிப்படுத்துவதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸாவை இராணுவ அல்லது சிவிலியன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டம் இஸ்ரேலுக்கு இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் கூறுகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் அமைச்சரவையில் இதுபற்றி நான் கேட்டேன், ஆனால் இன்னும் பதில் வரவில்லை'' என கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சரியான முடிவு எடுக்கப்படாவிட்டால் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ ஆட்சியோ அல்லது ஹமாஸ் ஆட்சியோ எழலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது பாதுகாப்பு அமைச்சரின் கருத்து தொடர்பில் பிரதமர் இன்னும் தெளிவான பதிலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.