தியத்தலாவ கார் பந்தய விபத்து : 15 வயது சிறுமி பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15.05) இரவு உயிரிழந்துள்ளார்.
அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எடந்த பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சதாராணி கவிஷ்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரழந்தவராவார்.
அவரது சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
2024 ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத் தொடர் ஏப்ரல் 21 ஆம் திகதி காலை தியத்தலாவ நரியகந்த பந்தயப் பாதையில் ஆரம்பமானது, இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



