ஆயுத வெடிமருந்து உற்பத்தி பிரிவை நிறுவ நடவடிக்கை : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டிற்குள் சிறிய ஆயுத வெடிமருந்து உற்பத்திப் பிரிவை நிறுவுவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித்த பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (பிஎம்சி) செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறிய ஆயுத தயாரிப்பு பிரிவு ஒன்றை அமைப்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்புத் தயாரிப்புப் பிரிவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது நாம் பார்க்க வேண்டிய ஒரு மாதிரி. இந்திய மாடலில் இருந்து நாம் நிறைய எடுத்துக் கொள்ளலாம், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில் தவறில்லை. நாமும் உற்பத்தியில் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.