மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: வலக்கை நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

#SriLanka #Batticaloa #Court Order
Mayoorikka
1 year ago
மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: வலக்கை நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.

 ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி சென்ற போது கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை விவகாரத்திற்கு தீர்வு கோரி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்த ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பாக்கிய செல்வம் அரியநேந்திரன், ஞானமுத்து சிறிநேசன் , முன்னாள் மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திர குமார், தர்மலிங்கம் சுரேஸ், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!