அம்பாறையில் கடலுக்குள் விழுந்த கனரக வாகனம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அம்பாறையில் கடலுக்குள் விழுந்த கனரக வாகனம்!

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.  

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே இன்று(15.05) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் கண்காணிப்பில் பாரிய கற்கள் போடப்பட்டு வருகின்றன.  

இதன் தொடர்ச்சியாக கல் அணைகள் அமைத்து கற்களைப் போட்டு நிரப்பும் முதற்கட்ட நடவடிக்கைக்காக பாரிய கற்களை கொட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹென்டர் கனரக டிப்பர் வாகனம் வழமை போன்று கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில் குடை சாய்ந்து கவிழ்ந்தது.  

எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் பொதுமக்கள் ஏனைய கனரக ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!