வரலாற்றில் முதல்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வரலாற்றில் முதல்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார்.  

இது குறித்து கல்வி அமைச்சும்  சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கூட்டணியின் களுத்துறை   மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேரே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!