ரஷ்ய - உக்ரைன் போருக்காக சென்ற 16 இலங்கையர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய உக்ரைன் போருக்கு சட்டவிரோதமாக சென்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
“நேற்று மாலை ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்தேன்.அவரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.ஒரு கோரிக்கை, போர் முனையில் கூலிப்படையாக பணியாற்றி வரும் போர்வீரர்களின் பட்டியலை எங்களிடம் வழங்க வேண்டும்.
]அடுத்ததாக அது பற்றிய முழுமையான விவரங்களை வழங்க வேண்டும். போர் வீரன் இறந்துவிட்டான் என்று அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளலாம், அல்லது போர் வீரனை இலங்கைக்கு அழைத்து வந்து தகனம் செய்யாதவர்கள் இருந்தால், பாதுகாப்பு அமைச்சகத்தை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.



