ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல்!

#SriLanka #Protest
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல்!

ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 'இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு' இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

 போராட்டம் தொடங்கியதும் பொலிஸார் பதாதைகளை அகற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!