இணையவழி விசா தொடர்பான கலந்துரையாடல் : நிதிக்குழு பங்கேற்காதமையால் அதிருப்தி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இணையவழி விசா தொடர்பான கலந்துரையாடல் : நிதிக்குழு பங்கேற்காதமையால் அதிருப்தி!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான இணையவழி வீசா தொடர்பான கலந்துரையாடலில் பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளாதமை தொடர்பில் நிதிக்குழு தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டது.

அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று பாராளுமன்றத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியது.

இந்தக் குழு முன்னர் கூடிய போது, ​​இந்த அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14.05) குழுவிற்கு வருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

எவ்வாறாயினும், நேற்று முன்தினம் (13.05) மாலை அறிவித்தல் விடுத்து குழுவின் முன் வர முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளன. 

இருப்பினும்நிதிக் குழுவிற்கு சமூகமளிக்காதது குழுவிற்கு அவமரியாதை செய்வதாக கருதப்படுவதாக நாடாளுமன்றத்தின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!