வெசாக் அலங்காரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#Festival
Mayoorikka
1 year ago

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்டுக்கொள்கிறது.
சந்தையில் இக்காலத்தில் பொலித்தீன் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட விதவிதமான வெசாக் அலங்காரங்களை காண முடிகிறது.
அதற்கு மாற்றீடாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பல பொருட்கள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துமாறும் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
வெசாக் அலங்காரம் செய்யும் போது, பாலித்தீன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



