திருமண முறிவுகளால் சிதைந்துபோகும் குடும்பங்கள் : சாய்ந்தமருதில் விழிப்புணர்வு நிகழ்வு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
திருமண முறிவுகளால் சிதைந்துபோகும் குடும்பங்கள் : சாய்ந்தமருதில் விழிப்புணர்வு நிகழ்வு!

அதிகரித்து வரும் திருமண முறிவுகளும் சிதைந்து போகும் குடும்ப கட்டமைப்புகளும் என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறா நெறிப்படுத்தலில் மகளீர் சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற மண்டபத்தில் இன்று(14) மாலை நடைபெற்றது.

இதன் போது விழிப்புணர்வு நிகழ்வில் விசேட உரையினை முஸ்லீம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணியின் பிரதிநிதிகளான ஹபிலா மற்றும் ஹஸ்ஸானா உட்பட HEO நிறுவனத்தின் பிரதிநிதிகளாக வை.றினோஸா, எம்.எம் றீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஏனைய உரையினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பொறுப்பதிகாரியும் பதில் பொறுப்பதிகாரியுமான றவூப், சாய்ந்தமருது பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி கள உத்தியோகத்தராக கடமை புரியும் ஏ.அபிரா, பிரதேச அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஐ.ஜாபீர் ,ஆகியோரும் மேற்கொண்டனர்.

அத்துடன் குவாஷி மன்றத்தின் யூரிகளாக கடமையாற்றுகின்ற மௌலவி ஏ.எம்.நாவாஸ், எம்.ஐ.உதுமாலெப்பை ,எம்.எஸ்.றவூஸூக் ,ஏ.எம் சஸ்றீன், ஏ.டபிள்யூ சரோபர், ஏ.எம்.ரசீட் , எஸ்.எல்.றியாஸ், எப்.எப்.அஹானி, ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!