டிரான் அலஸ் அவர்களே இது உங்களின் உத்தரவின் கீழ் இடம்பெறுகின்றதா? அம்பிகா கேள்வி

#SriLanka
Mayoorikka
1 year ago
டிரான் அலஸ் அவர்களே இது உங்களின் உத்தரவின் கீழ் இடம்பெறுகின்றதா? அம்பிகா கேள்வி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதிகளில் இடம்பெற்றகொடுரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் அதற்காக தெரிவிக்கப்படும் காரணங்களும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன என இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

 டுவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் மற்றுமொரு நீதிமன்றமும் தடைவிதித்துள்ளது - கல்முனை நீதிமன்றம் அரசாங்கத்தை பொறுத்தவரை மே18 ம் திகதியை நினைவுகூருவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயுர் கொடுப்பதாகும்.

 நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்வதற்கான காரணங்கள் நோய் பரவுவதை தடுப்பதிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் புத்துயுர் பெறுவதை தடுப்பதாக மாற்றமடைந்துள்ளன. இதுபோரின் இறுதிகாலப்பகுதிகளில் இடம்பெற்றகொடுரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

 இன்றுகாலை மட்டக்களப்பில் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுவதை பொலிஸார் தடுத்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அந்த பகுதிக்கான இணைப்பாளர் தலையிட்ட பின்னரே அவர்களிற்கு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். டிரான் அலஸ் அவர்களே இது உங்களின் உத்தரவின் கீழ் இடம்பெறுகின்றதா? என கேள்வி எழுப்பியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!