முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்த பெண்ணை விடுதலை செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: இந்திய எம்பி
#India
#SriLanka
#Trincomalee
#Arrest
Mayoorikka
1 year ago

திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து விநியோகித்தமைக்காக கைதுசெய்யப்பட்ட பெண்ணை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கேட்டுக்கொள்ளவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து விநியோகித்தமைக்காக திருகோணமலையில் பெண் ஒருவரை இலங்கை அரசாங்கம் தாக்கி கைதுசெய்துள்ளமை கண்டிக்கப்படவேண்டிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கைதுசெய்யப்பட்ட பெண்ணை விடுதலை செய்யவேண்டும் இந்த ஒடுக்குமுறையை நிறுத்தவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



