கரட் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

#SriLanka
Mayoorikka
1 year ago
கரட் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

கரட் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதும் 7 மாதமுமான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சம்பவத்தின் போது உயிரிழந்த சிறுவனின் தாய் வீட்டில் உணவு தயாரித்துக் கொண்டிருந்துள்ள நிலையில் சிறுவனின் சகோதரி சிறுவனுக்கு கரட் துண்டு ஒன்றை உண்பதற்குக் கொடுத்துள்ளார்.

 இதன்போது இந்த கரட் துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ள நிலையில் சிறுவனின் தாயும் தந்தையும் அதனை வெளியில் எடுக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், தொண்டையில் சிக்கிய கரட் துண்டை வெளியில் எடுக்க முடியாததால் சிறுவனை அம்பியூலன்ஸ் மூலம் அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 பிரேத பரிசோதனையில் சிறுவனின் தொண்டையில் கரட் துண்டு சிக்கியதால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலையின் மரண விசாரணையில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!