சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் : பாரிய மோசடி அம்பலம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும் பாரியளவிலான காலணி கடத்தல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இவர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு ஜோடி காலணிக்கு குறைந்தது 2000 ரூபா வரி அறவிடப்படுகிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணிகளை விட, இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு காலணிகளே சந்தையில் மிகவும் குறைந்த விலையில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.