வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியாவில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் உயிரிழந்த அனைவருக்கும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவுத்தூபிக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவித்திட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் போராளிகுடும்பங்கள், பொதுமக்கள்,பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.