2020ல் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்
#SriLanka
#Arrest
#Murder
#Women
Prasu
1 year ago
4 வருடங்களுக்கு முன்னர் ஹினிதும பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கழிவு நீர் கால்வாயினுள் போடப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக காலி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இரண்டாவது கணவரினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது, சந்தேக நபர் இந்த பெண்ணை பலமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை வீட்டின் கழிவு நீர் கால்வாயினுள் போட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.