மன்னாரில் இந்திய தனியார் கம்பனிக்காக விற்பனை செய்யப்பட்ட காணிகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மன்னாரில் இந்திய தனியார் கம்பனிக்காக  விற்பனை செய்யப்பட்ட காணிகள்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இதனால் சுமார் 10 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது குறித்த காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை பொலிஸாரின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  

மேலும் குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்வோம் என அச்சுரூத்துவதாகவும்,அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!