மீண்டும் வெடித்த எரிமலை : இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை

#Indonesia #tsunami #Warning #Blast #volcano
Prasu
2 years ago
மீண்டும் வெடித்த எரிமலை : இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுவது இந்த மாதத்தில் இது 2வது முறையாகும்.

 முன்னதாக, கடந்த 16ம் தேதி ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4