அண்டைய நாட்டினருடன் மோதல்களை குறைக்க வேண்டும் - மரியம் நவாஸ்

#Parliament #Women #Pakistan #Country #Member #Fight
Prasu
2 years ago
அண்டைய நாட்டினருடன் மோதல்களை குறைக்க வேண்டும் - மரியம் நவாஸ்

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 2,400 சீக்கியர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.

இந்நிலையில், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாகிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் பங்கேற்றார். 

அப்போது சீக்கிய யாத்திரிகர்கள் குழுவைச் சந்தித்தார். அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த யாத்திரிகர்கள்.

 அப்போது பேசிய மரியம் நவாஸ், ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது. அவர்களுக்காக இதயத்தைத் திறக்கவேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பாக, தனது தந்தை நவாஸ் ஷெரிப் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4