துபாய் நாட்டில் நடந்த வெள்ள ஆனர்த்தத்திற்கான காரணம் இதுதான்: இது இயற்கையின் சதியா அல்லது செயற்கையினால் வந்த விளைவா?

#Flood #Dubai
Mayoorikka
1 week ago
துபாய் நாட்டில் நடந்த வெள்ள ஆனர்த்தத்திற்கான காரணம் இதுதான்: இது இயற்கையின் சதியா அல்லது  செயற்கையினால் வந்த விளைவா?

உலகளாவிய ரீதியிலே இயற்கை அனர்த்தங்கள் பல நாடுகளில் நிகழ்ந்த வண்ணமே இருக்கிற. ஜப்பானாக இருக்கட்டும் இந்தோனேசியாவாக இருக்கட்டும் இந்தியாவாக இருக்கட்டும் அமெரிக்காவாக இருக்கட்டும் பல நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் நடைபெறுவது வழக்கம். 

 அமெரிக்காவை பொறுத்தவரையில் காடுகள் எரிவது மற்றும் இந்தோனேசியாவை பொறுத்தவரையில் எரிமலைகள் மற்றும் சுனாமி ஜப்பானை பொருத்தவரையிலும் பல வெள்ளப்பெருக்குகள் சுனாமிகள் என்று பல விதமான இயற்கை அனர்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. 

 இந்த நிலையில் தற்பொழுது சில நாட்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்ற அந்த வெள்ளப்பெருக்கு,  சூறாவளி அத்தோடு கூடிய மழை மற்றும் அந்த வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அளவை மீறிய அளவுக்கு கணக்கிடப்பட்டிருக்கிறது.

 இந்த இயற்கை அனர்த்தத்தின் காரணத்தை பலர் பலவிதமாக கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலே குறிப்பாக ஒரு சில மாதங்களுக்கு பிற்பாடு துபாயில் மழை குறைவாக இருந்ததன் காரணத்தினால் செயற்கை மழை பெய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

 அதைவேளையிலே ஆன்மீகவாதிகள் அதாவது இஸ்லாமியர்களாக இருக்கட்டும், கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் இந்துக்களாக இருக்கட்டும் இவர்களின் கூற்று எப்படி இருக்கிறது என்றால் அதாவது துபாயை பொறுத்தவரையில் ஒரு அரபு நாட்டிலே இருக்கின்ற சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தாண்டி ஏன் ஆப்பிரிக்கா ஐரோப்பிய அமெரிக்க நாட்டில் இருப்பதை விடவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

 அதாவது துபாயில் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத விபச்சாரங்கள் அதிகளவில் பரவலாக இருக்கிறது. பலர் அதனை பல ஊடகங்களில் தெரிவித்தும் இருக்கிறார்கள்.  அதேவேளையிலே ஒளி, ஒலிநாடாக்கள் ஊடாகவும் அதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 

 அதேவேளையில் கள்ளப் பணத்தின் புழக்கம் மற்றும் அளவுக்கு மீறிய அளவில் கட்டப்பட்ட கட்டடங்கள், வான் உயர்ந்த அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாண்டிய அளவிற்கு உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கையை மீறிய பல செயல்பாடுகள் மற்றும் சட்டத்துக்கு மீறிய நாணய பரிமாற்று, கள்ளக் கடத்தல் மற்றும் பலருடைய கள்ளப் பணங்களை சேர்க்கின்ற வங்கிகள் என்று பல சட்டத்துக்கு மீறிய செயல்களும் ஒவ்வொரு நாடுகளுக்கும் மீறிய செயல்களும் அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் அது ஆண்டவனுடைய செயலாக கூட இருக்கலாம் என்று சில ஆன்மீகவாதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 அதைத் தாண்டி நாங்கள் பார்க்கின்ற பொழுது அங்கே கட்டப்பட்ட கட்டிடங்கள் ஒரு தூரநோக்கு பார்வையில் இல்லாமல்  வெள்ளப் பெருக்குகளை, பெய்கின்ற மழை வெள்ளங்களை உள்வாங்காத அளவிற்கு அந்த கட்டிட பொறியியலாளர்கள் அல்லது கட்டிட வல்லுநர்கள் அந்தக் கட்டிடங்களை கட்டி அவர்கள்  சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 அங்கே கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடங்களில் அதிகமான கட்டிடங்கள் சீனாவினுடைய குத்தகைக்கு எடுத்து கட்டப்பட்டதும், அமெரிக்காவின் குத்தகைக்கு எடுத்து கட்டப்பட்டதும், ஜப்பானுடைய குத்தைக்கு எடுத்து கட்டப்பட்ட கட்டிடங்க ளாக இருக்கின்றன.

அதில் சில பலமாக இருந்தாலும் சில கட்டிடங்கள் பாறி கூட விழுந்திருக்கின்றன. மற்றும் சுற்றுப்புற சூழலிலே நடப்பட்ட அதாவது செயற்கையாக நடப்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. விமான நிலையம் ஒரு நீச்சல் தடாகம் போல அல்லது ஒரு கடல் போல குளம் போல காட்சி அளிப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது. 

 இது எல்லாம் அந்த தூரநோக்கு பார்வையில்லாமல் சரியான கட்டிட நிபுணர்களுடைய ஆலோசனை இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களின் விளைவாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 

 இந்தியாவிலே வெள்ளப்பெருக்கு வந்து எவ்வளவு தூரம்  நகரங்களையும் அழித்து சென்றதோ அப்படி ஒரு தோற்றப்பாட்டை பார்க்கக் கூடியதாக இருந்திருக்கிறது. அதேவேளையிலே பல வாகனங்கள் இயற்கை அழிவினால் சேதம் ஆக்கப்பட்டிருக்கின்றன.

 மற்றும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணத்தினால் பெருமளவிலான துபாய் நாட்டினுடைய, துபாயை தொடர்பு கொண்டு இயங்குகின்ற பங்குச் சந்தைகள் சரிவு நிலை ஏற்பட்டிருக்கின்றது. மற்றும் பலர், பல கட்டிடங்களை வாங்கி இருக்கிறார்கள். வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள் பல கட்டடங்கள் புதுசு புதுசாக வாங்கி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறன. 

 உலக நாட்டில் இருக்கின்ற பலர் அங்கே முதலீடு செய்திருக்கிறார்கள் அதுவும் கட்டிடத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

 பலர் அடுக்குமாடியில், இலங்கை இந்தியா என பல நாடுகளின் வியாபாரிகள் அங்கே பல நிறுவனங்களினுடைய தலைமை அலுவலகங்களாகவும் கிளை நிறுவனங்களாகவும் வைத்திருந்திருக்கிறார்கள். இந்த அனைத்து முதலீடுகளும் பின் தங்கியிருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

   துபாயினுடைய ரியல் எஸ்டேட் அதாவது கட்டுமானப் பணியும் வீழ்ச்சி அடைந்திருப்பதை பார்க்க கூடியதாக உள்ளது. அதைவிட பல நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களை அங்கே, அதவாது இலங்கையாக இருக்கட்டும் அதேபோல் வேறு பல நாடுகளாக இருக்கட்டும் அனைத்தும் அவர்களுடைய நிறுவனங்களின் சில கிளைகளையும் நிறுவனங்களையும், நகைக்கடைகள் மற்றும் பல ஹொட்டேல்கள், பல சிறப்பு கடைகள் உணவகங்கள் இப்படி பல நிறுவனங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். 

 இந்த நிலையில்  தற்பொழுது இந்த அனர்த்தம் காரணமாக துபாயின் பங்குச் சந்தை உட்பட அனைத்து வர்த்தகங்களும், மற்றும் சுற்றுலாத் துறையும் பாரிய சரிவை நோக்கிச் செல்கின்றது என்பதை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.