பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

#Death #Pakistan #Rain #Flood
Prasu
1 year ago
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கபப்ட்டுள்ளது. 

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில், கனமழை, வெள்ளம், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் அந்நாட்டில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!