இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்திய ஈரான்!

#SriLanka #world_news #Israel #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்திய ஈரான்!

இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. நேற்றிரவு (13.04) ஈரான் இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்ட இடங்களை ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான தாக்குதலில் ஈரான் துணைத் தூதரகத்தில் இருந்த 13 பேர் கொல்லப்பட்டதுடன் அவர்களில் 05 இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.  

இதுதொடர்பான தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேலை தாக்கப்போவதாக ஈரான் தலைவர் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த இராணுவ நிலைமை குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையில் விசேட கலந்துரையாடலை கூட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4