சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் கத்தி குத்து தாக்குதல் : 05 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகத்தில் இருந்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ஆனால் இது தொடர்பில் சரியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே