ஸ்பெயினில் செக் குடியரசின் பிரஜை ஒருவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்பெயினில் செக் குடியரசின் பிரஜை ஒருவர் பலி!

ஸ்பெயினின் - டெனெரிஃப் கேனரி தீவில் ஏற்பட்ட புயலின் போது பெரும் அலைகளை புகைப்படம் எடுக்கச் சென்ற செக் குடியரசின் சுற்றுலா பயணி ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று (11.04) அறிவித்துள்ளனர்.

புவேர்ட்டோ டி லா குரூஸ் நகரில் 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.  மீட்பு படையினர் அவருடைய உடலை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக டெனெரிஃப் பகுதியில் இருந்து 50 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4