கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

அதுருகிரிய, கல்வருசாவ வீதியிலுள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று (09.04) மாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தகருக்கு சொந்தமான வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் மூவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

 வெளிநாட்டில் இருக்கும் கொரத்தோட்ட "கைவரு முத்து" என்ற பாதாள உலக செயற்பாட்டாளர், குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும், பணத்தை தர மறுத்ததன் காரணமாக அவரை அச்சுறுத்தியிருக்கலாம் எனவும்  பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

மஹரகம பமுன்வ பிரதேசத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் இந்த கோடீஸ்வர வர்த்தகர் மேலும் பல ஆடைத் தொழிற்சாலைகளை வைத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெனடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!