பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கை விமானப்படை வீரர் உயிரிழப்பு

#SriLanka #GunShoot #Air Force
Lanka4
1 year ago
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கை விமானப்படை வீரர் உயிரிழப்பு

பாதுக்கை - அங்கமுவ பிரதேசத்தில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​ பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 26 வயதுடைய இலங்கை விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!