பின்லாந்தில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய 12 வயது சிறுவன்

#Death #School #Arrest #children #GunShoot #Finland
Prasu
2 years ago
பின்லாந்தில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய 12 வயது சிறுவன்

பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் மிகவும் பிரபலமான வீர்டோலா பள்ளி உள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 800 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்கள், பணியாளர்கள் என சுமார் 90 பேர் வேலை செய்கின்றனர். 

இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் 12 வயது சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சுட்டான். 

இதனால் குழந்தைகள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தன.

தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர், தங்கள் குழந்தைளை பார்ப்பதற்காக பள்ளி முன் திரண்டனர். 

பள்ளி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4