காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Gaza
Thamilini
2 years ago
காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் குழுவொன்று காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வான் தாக்குதலில் 07 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தாக்குதலில் நான்கு இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் படைகள் டீல் அல் பலாஹி அல் அக்ஸா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய ஜிஹாத் கட்டளை மையம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.
இருப்பினும், மருத்துவமனைகள் முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற இஸ்ரேலிய குற்றச்சாட்டை ஹமாஸ் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மறுத்துள்ளனர்.