12 போர் துப்பாக்கி மற்றும் 5 உயிருள்ள தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி மற்றும் 5 உயிருள்ள தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் துப்பாக்கியும் மேலதிக விசாரணைகளுக்காக கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.