வாக்குவாதம் முற்றியதால் நேர்ந்த விபரீதம் : தம்பியை கொலை செய்த அண்ணன்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ருவன்வெல்ல, குடாகம பகுதியில் வாக்குவாதம் முற்றியதால் கூரிய ஆயுதத்தால் தன் உடன் பிறந்த சகோதரனை அண்ணன் கொலை செய்துள்ளார்.
குடாகம, அமித்திரிகல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அவரது தம்பி வந்து வாக்குவாதம் செய்த நிலையில், இளைய சகோதரர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.