ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி!

#SriLanka #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி!

வரலாற்றில் மிக மோசமான பொருளாதாரச் சவாலை எதிர்கொண்டு ஒரு நாடாக நாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனைத் தாங்கக்கூடிய தேசமாக மீட்சிப் பயணத்தின் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இன்று நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு பல்லின சமூகமாக வாழும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதுடன், களங்கப்படுத்தும் எந்தவொரு சதிச் செயலிலும் சிக்காமல் நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக புத்திசாலித்தனமாக எம்மை அர்ப்பணிப்பது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!