நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் - 5 பேர் பலி

#Death #Accident #Nepal #vehicle #River
Prasu
2 years ago
நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் - 5 பேர் பலி

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

"காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் உள்பட 6 பேர் டாக்சியில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

அந்த டாக்சி சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போனதால் அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

உயிரிந்தவர்களில் ஒருவர் டாக்சியின் டிரைவர் என தெரியவந்துள்ளது" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4