சுவிட்சர்லாந்தில் தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸ் அதிகாரிகள்

#Police #people #Warning #money #Swiss #Alert #Scam
Prasu
2 years ago
சுவிட்சர்லாந்தில் தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸ் அதிகாரிகள்

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி துவங்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

சுவிஸில் உள்ள தாய்மார்களுக்கு, அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த எண்ணின் வாட்ஸ் ஆப் செய்தி ஒன்று அனுப்பமுடியுமா? என்னும் ரீதியில் மர்ம குழுக்களால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இல்லையென்றால், அம்மா, கொஞ்சம் பணம் அனுப்பமுடியுமா என்று அனுப்பப்படுகிறது. அத்தகைய செய்தி வந்தால், ஒன்றில் உங்கள் பிள்ளையை அவருடைய மொபைல் எண்ணில் அழைத்துப் பேசுங்கள், அல்லது அந்த செய்திக்கு பதிலளிக்காதீர்கள் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

சில மாதங்கள் முன்வரை, பிரெஞ்சு மொழி அல்லது ஜெர்மன் மொழி பேசும் பெற்றோருக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பப்பட்டுவந்த நிலையில், தற்போது அவரவர் பேசும் மொழியிலேயே இந்த மோசடி செய்திகள் அனுப்பப்படுகின்றன.

 இது ஒரு நவீன மோசடி என்றும், பணமோ அல்லது வங்கி விவரங்களையோ அல்லது பாஸ்வேர்டுகளையோ மொபைலில் அனுப்பாதீர்கள் என எச்சரிக்கிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4