கலகொடஅத்தே ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கலகொடஅத்தே ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

ஞானசார தேரரை பார்வையிட வந்த இராவணா சக்தி அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

ஞானசார தேரர் இதற்கு முன்னர் சுகவீனமுற்றிருந்ததாகவும், சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.  

ஞானசார தேரரின் கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "அவர் உண்மையில் நம்மைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் சமூகம் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சட்டத்தை மதிப்பதால், சட்டம் எதைக் கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!