கொழும்பின் புறநகர் பகுதியில் பெண் ஒருவர் படுகொலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கொழும்பின் புறநகர் பகுதியில் பெண் ஒருவர் படுகொலை!

கொழும்பின் புறநகர் பகுதியில் பெண்ணொருவர் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு 11.00 மணியளவில் அவர் வீட்டில் விழுந்து கிடப்பதைக் கண்டவர்கள் உடனடியாக 1990 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இந் நிலையில் அவர்கள் வந்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார். இவரும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றனர்.  

வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

 இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதானால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!