நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

#SriLanka #Arrest #NuwaraEliya #drugs #Smuggling
Prasu
2 years ago
நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

நுவரெலியாவில் மனைவியுடன் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நேற்று நடத்திய திடீர் சோதனையின் போது நந்தசேன எனப்படும் டொன் நந்தசேன என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தசேன தனது இரண்டாவது மனைவியுடன் நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

இதன் பெறுமதி சுமார் 15 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளின் உரிமையாளரான நந்தசேனவே கைது செய்யப்பட்டுள்ளார். 

 வத்தளை மற்றும் கணேமுல்ல பிரதேசத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு பாரிய வீடுகள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4