குருநாகல் பிரதேசத்தில் தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
குருநாகல் பிரதேசத்தில் தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து!

குருநாகல் மல்கடுவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து  ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

தீயினால் பேரந்து சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

பின்னர், குருநாகல் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை முழுமையாக அணைத்துள்ளனர். 

சம்பவத்தினால் யாரேனும் காயமடைந்துள்ளார்களா என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!