நெருக்கடி நிலைமைகளுக்காக பதவி விலகப் போவதில்லை!

#SriLanka #Bank
Mayoorikka
2 years ago
நெருக்கடி நிலைமைகளுக்காக பதவி விலகப் போவதில்லை!

தனது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து தான் விலகப் போவதில்லை என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 மத்திய வங்கியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 எனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, மறுபரிசீலனை போன்ற காரணங்களால் நான் வெளியேறமாட்டேன் என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

 நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. நான் அதை செய்தேன். அதனால் நான் விலகுவதற்கு இதனை ஒரு காரணமாக பார்க்கவில்லை. 

 தொழிற்சங்கங்களுடன் பேசியே மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!