ஹைட்டியில் வெடித்த வன்முறை : இலங்கையர்கள் தொடர்பில் எழுந்துள்ள கவலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹைட்டியின் தலைநகர் போர்ட் - ஓ- பிரின்ஸ் வீதிகளில் ஆயுதமேந்திய கும்பல் வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அந்த நாட்டில் உள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் உறவுகள் கவலைக்கொண்டுள்ளது.
இதனையடுத்து ஹெய்ட்டியில் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இருந்து இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கையர்கள் அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் வசிப்பதாக அந்த நிறுவனங்கள் உறுதி செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.