டுபாயில் இருந்து இலங்கை வந்த இருவர் கைது!
#SriLanka
#Arrest
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரிடம் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிரீன் சேனல் டெர்மினலில் இருவர் அடையாளம் காணப்பட்டதாகவும், பின்னர் சோதனை செய்து தங்கப் பொருட்களைக் கண்டுபிடித்ததாகவும் இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பயணிகள் இருவரும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.