அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன! அமைச்சர் பெருமிதம்

#SriLanka #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன! அமைச்சர் பெருமிதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 

16,000 மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம். அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!