தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : இளைஞர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : இளைஞர் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (19.03) இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற வேன் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

இந்த விபத்தில் வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதுடன், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாகொட, காலி பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். வேனின் சாரதி தூங்கியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!