சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19.03) ஆரம்பமாகவுள்ளது. 

அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20.03) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் உள்நோக்கத்துடன் முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி  பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக அதன் பதில் செயலாளர் நாயகம் திரு.துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!