கெஹெலியவை காப்பாற்றியது போல் சபாநாயகரையும் மொட்டுக் கட்சி காப்பாற்றும்!

#SriLanka #Parliament #speaker
Mayoorikka
1 year ago
கெஹெலியவை காப்பாற்றியது போல் சபாநாயகரையும் மொட்டுக் கட்சி காப்பாற்றும்!

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மொட்டு கட்சி காப்பாற்றியது போல சபாநாயகரையும் காப்பாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 இதனை தொடர்ந்து, புதன்கிழமை மாலை இந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதேபோல், இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான சபாநாயகராக பதிவாகியுள்ள மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவினர் வாக்களித்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என மரிக்கார் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், குறித்த பிரேரணைக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கில்லை என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!