சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை அதன் 17 பணியாளர்களுடன் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் கமாண்டோக்கள் உதவியுடன் கப்பலில் இருந்த 35 சோமாலிய கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலிய கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட வணிகக் கப்பலை சர்வதேச கடற்படை மீட்டது இதுவே முதல் முறை.